உலகம்

நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்

பயங்கரவாத அச்சுறுத்தல், கடன் சுமையால் மூழ்கும் பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகவரகமான ‘SUPARCO’, இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த செயற்கைகோள் அல்லது விண்வெளி திட்டம் என எதையும் மேற்கொண்டது இல்லை.

அனைத்தும் சீனாவின் ஆதரவுடன்தான் மேற்கொண்டு வருகிறது.

காலநிலை மாற்றம் சார்ந்த அச்சுறுத்தலை சமாளிப்பது தொடர்பாக கடந்த மாதம் பாகிஸ்தான் விண்ணில் நிலைநிறுத்திய ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் சீனாவில் இருந்து ஏவப்பட்டது.

பாகிஸ்தான் கொடியுடன் அது விண்ணில் ஏவப்பட்டிருந்தாலும் தொழில்நுட்ப ரீதியான பணிகளை சீனா மேற்கொண்டதாக தகவல் கூறுகின்றது.

இந்நிலையில், சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அமைச்சர் ஹசன் இக்பால், தங்கள் நாட்டின் விண்வெளி திட்டங்கள் குறித்து திங்கட்கிழமையன்று பேசியுள்ளார்.

அதற்கு சீனாவின் உதவி அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் எதிர்வரும் 2035ஆம் ஆண்டில் நிலவில் விண்கலனை தரையிறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பி.பி.சி

Related posts

ஜேர்மனி இராணுவ முகாமிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் மரணம்

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து