வகைப்படுத்தப்படாத

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனா திட்டம்

(UTV|CHINA)-நிலவின் மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை இந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக நிலவு குறித்து ஆய்வில் சீனாவின் பங்கு முக்கியமானதாகும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சேஞ்ச்-3 என்ற திட்டத்தின்கீழ் லூனார் ரோவரை சீனர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கினர். இதன் மூலம் நிலவின் பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன.

அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி 2018 ஆம் ஆண்டில் புதிய லூனார் ரோவர் ஒன்றை நிலவின் மறுப்பக்கத்திற்கு அனுப்ப போவதாக தெரிவித்தது.

பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய இது வரை எந்த நாடும் செயற்கைக் கோள் அனுப்பவில்லை.

இதற்காக சீனா சேஞ்ச்-4 என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூன் மாதம் செயற்கை கோள் ஒன்றை அனுப்ப உள்ளது. நிலவிலிருந்து 60,000 கி.மீ. தொலைவில் நிறுத்தப்படவுள்ள இந்த செயற்கை கோள் பூமிக்கும், நிலவின் மறுப்பக்கத்திற்கும் இடையே தகவல் தொடர்பிற்காக அனுப்பப்படுகிறது.

அதைத்தொடர்ந்து லூனார் ரோவர் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த ரோவர் மூலம் நிலா குறித்த அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யலாம் என சீனா அறிவித்துள்ளது.

இதன் மூலம் நிலவின் மறுப்பக்கத்திற்கு லூனார் ரோவர் அனுப்பும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மனைவியைும் பிள்ளையைும் வெட்டிவிட்டு தானும் கழுத்து வெட்டி தற்கொலை

Ten FR petitions filed against death penalty

முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் மழை