அரசியல்உள்நாடு

நிலந்தி எம்.பி குறித்து அவதூறுகள் – கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த சந்தேக நபரைக் கைது செய்து ஆஜர்படுத்தியிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்தமைக்காக மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் – IMF எச்சரிக்கை

ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள்

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்