வணிகம்

நிலக்கடலை செய்கையில் நட்டம்

(UTV|கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்யும் நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் இதனால் தாங்கள் நட்டத்தை எதிர் கொள்வதாகவும், நிலக்கடலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – செம்மலை, புளியமுனை, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், உடையார்கட்டு, மூங்கிலாறு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இம்முறை அதிக விவசாயிகள் நிலக்கடலை செய்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது, நிலக்கடலை செய்கைக்கான செலவுகள் அதிகரித்துள்ள போதும், அதற்கான இலாபம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் நடுகைக்கான நிலக்கடலை ஒரு கிலோ 320 ரூபாய்க்கே கொள்வனவு செய்து பயிரிட்டதாகவும் அதனை தற்போது அறுவடை செய்யப்பட்டு 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையான விலைக்கே தனியாருக்கு விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், தமது நிலக்கடலைக்கு உரிய விலையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலக்கடலைச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

ஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals