சூடான செய்திகள் 1

நிறைவுக்கு வந்தது நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் விவகாரம்

(UTVNEWS | COLOMBO) – முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்டிருந்தன.

குறித்த வழக்கினுடைய முதலாவது தரப்பினராகிய புத்த பிக்கு மரணம் அடைந்த காரணத்தினால் அந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்திலே இடம்பெற்றுவந்த செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் சம்பந்தமான இரண்டு வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

Related posts

எதிர்வரும் 24ம் திகதி நாடளாவிய ரீதியில் பேரூந்து பணிப்புறக்கணிப்பு

இலங்கையின் அடுத்து ஜனாதிபதி யார்? கணித்து கூறிய பிரபல ஜோதிடர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]