உள்நாடு

நிறுவனங்களில் COVID அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரியொருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

நியமிக்கப்படும் குறித்த அதிகாரியினூடாக நிறுவன ரீதியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை கண்காணித்து, மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரியுடன் தொடர்புகளை பேணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா தொற்று சமூகத்தில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

Related posts

அதிகரித்த முட்டை விலை!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.