உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி – புத்தளத்தில் சோகம்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 10ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கும்புக்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி இலங்கைக்கு

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு