உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய பஸ் – 7 பேர் காயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாத்ரீகர்கள் பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பஸ்ஸில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸியின் பிரேக், செயல் இழந்தமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது

Related posts

பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

editor

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றிய விருது விழா : UTV ஊடகவியலாளர் இருவருக்கு விருதுகள்

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்