பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பின்புறத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
