உள்நாடு

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில், 1.5 பில்லியன் டொலர் ஜப்பானின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் லைட் ரயில்வே திட்டத்தை நிறுத்துவது தொடர்பான செலவுகளை ஈடுசெய்யுமாறு இலங்கையிடம் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தூதுக்குழுவினரிடம், நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு செலவுகளைத் தீர்ப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜப்பானிய நிதி அமைச்சரின் செய்தியை எடுத்துரைத்தார், இலங்கை கடன் மறுசீரமைப்பு, IMF திட்டத்தை நிலைநிறுத்துதல் மற்றும் நிறுத்தப்பட்ட முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு வசதியாக இரத்து செய்யப்பட்ட LRT திட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலுவைகளை திருப்பிச் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கை விஜயம்

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு