உள்நாடுசூடான செய்திகள் 1

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 13 விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 33 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியளாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் 33 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு

அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர்