உலகம்

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் லோயர் நோர்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது. ஹேஸ்டிங்ஸ் நகருக்கு தெற்கு 20 கிமீ தொலைவில் ஹாக்ஸ் விரிகுடா பகுதியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை சுமார் 6 ஆயிரம் பேர் உணர்ந்ததாக தெரிவிக்கின்றது.

ஹாக்ஸ் விரிகுடா நியூசிலாந்தின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். முன்னதாக 1931இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 256 பேர் கொல்லப்பட்டனர்.

50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்து, “நெருப்பு வளையம்” பகுதியில் அமைந்துள்ளது, இது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் வளைவாகும். சி.என்.என்.

Related posts

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

editor

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் – உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 31 பலஸ்தீனர்கள் பலி

editor

சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் நோன்பு ஆரம்பம்

editor