உலகம்

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு – பலர் பலி

நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் நேற்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிதாரியான ஷேன் தமுரா , 27 வயதுடைய லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர்.

AR-15 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணிந்து, 44 மாடிகள் கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் முதலில் கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 33-ஆவது தளத்திற்குச் சென்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஒருவரும் மற்றும் நான்கு பொதுமக்கள் அடங்குவர்.

மேலும், ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அமெரிக்காவில் வலுக்கும் ‘டெல்டா’

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது

editor