உலகம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV | நியூசிலாந்து  ) –  நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள லோயர் ஹட் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது.

இதனால் அச்சமடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். . நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

இரவு 8 மணியளவில், ஒக்லாந்து மற்றும் கிறைஸ்ட்சர்ச் உட்பட வடக்கு மற்றும் தெற்கு தீவுகள் இரண்டிலும் 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவுஸ்தி​ரேலியாவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ட்ரம்ப் இனை பின்தள்ளி பைடன் முன்னிலையில்

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி