அரசியல்உள்நாடு

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கை விஜயம்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நியூசிலாந்தின் ​​வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.

அவரின் விஜயமானது, அவுஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் மற்றும் இந்தியாவுக்காக அமைந்துள்ளதுடன், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் செல்லவுள்ளார்.

Related posts

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

Dilshad

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலர் காயம்

editor

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

editor