உள்நாடுமருத்துவம்

நிபா வைரஸ் பரிசோதனை குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்துடன், நிபா வைரஸ் தொடர்பாக இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், இன்று அமைச்சரவை கூட்டத்தின் போது அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

editor

பெலியத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலுமொருவர் கைது!