அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு செய்வதில் கோரமின்றி குழப்பம்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை அமர்வை கூட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு தவிசாளரை தெரிவு செய்வதற்கான சபை அமர்வு நடைபெறுவதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ எல் எம் அஸ்மி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்திருந்தார்.

இருந்த போதும் இதுவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள் மட்டுமே
கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தவிசாளர் தெருவினை நடத்துவதற்கான சபை அமர்வுக்கான கோரம் 50 வீதம் என்பதால் , 07 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இதனால் 50 வீத கோரமின்றி புதிய தவிசாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நிந்தவூர் பிரதேச சபை அமர்வுக்கு SLMC ,NPP ,SJP ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சமூகம் அளிக்கவில்லை என தெரியவருகிறது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டி – எம்.ஏ.சுமந்திரன்

editor

திலீபனின் எழுச்சி ஊர்தி 2ஆம் நாள் பயணம் ஆரம்பம்!

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

editor