நிந்தவூரில் இயங்கி வந்த அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 48 வது கிளையினை மீண்டும் பொருத்தமான இடத்தில் திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ பி பவுல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸடீன், நிந்தவூர் பிரதேச சபையின் NPP உறுப்பினர்களான எம் எல் சம்சுன் அலி, ஏ இப்திகார் அஹமட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் எஸ் எம் ஆரிப் , உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் கூறியதாவது,
நிந்தவூரில் இயங்கி வந்த அரச மருந்தாக்கள் கூட்டுத்தாசனத்தின் 48வது கிளையை கல்முனைக்கு இடமாற்றி எடுத்துச் சென்று விட்டதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றார்கள்.
இதனை பொறுப்புடன் நான் மருத்துரைக்கின்றேன்.
கல்முனை மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தபனத்தின் ஒசுசல கிளை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 68வது ஒசுசல கிளை கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.
இதனை புரியாமல், நிந்தவூரில் இயங்கிய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 48 வது ஒசுசல கிளையை இடமாற்றி கல்முனைக்கு கொண்டு போய் நிறுவியுள்ளதாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து சிலர் வாங்குறோத்து அரசியலை செய்ய முற்பட்டனர்.
ஆனால் நிந்தவூரில் இயங்கி வந்த அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 48 வது கிளையின் வியாபாரம் நடவடிக்கைகள் மந்தமாக காணப்பட்டமையாலே அந்த ஒசுசல கிளை மூடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அதனை மீண்டும் நிந்தவூரில் திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டுள்ளேன்.
இன்ஷா அல்லாஹ் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையை அண்மித்ததாக பொருத்தமான இடத்தை அடையாளப்படுத்தும் இடத்து, நிந்தவூரில் இருந்த ஒசுசல கிளையை மீண்டும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியையும் சொல்லி வைக்க விரும்புகின்றேன்
கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு பொறுப்புக்களை சுமந்தவராக திகழும் டாக்டர் மசூத் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கிடைத்தது பெரும் பேறாகும். இவர் மருத்துவ துறையில் நவீன சிந்தனைகளை கொண்டவர் ஆவார்.
வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் என்பது ஒரு அமானிதமாகும். இந்த அமானிதத்தை கொண்டுள்ளார்கள் வைத்தியசாலையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறான பொறுப்புதாரிகள் ஒவ்வொருவரும் நிச்சயம் மறுமையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கின்றவர்களாகிய நாம் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும்.
வைத்தியசாலையின் அபிவிருத்தியில் நீங்கள் தனியாகவும் கூட்டாகவும் பங்கெடுத்து இவைத்தியசாலை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதனை முன்னேற்றுவதற்கு பாடுபட வேண்டும்- என்றார்.
