சபரகமுவ மாகாண கல்வி, கலாச்சார மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்காக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சிக்கு ரூ.1125 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி, கலாச்சார மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாகாணத்தில் குறிப்பிட்ட மேம்பாட்டுக்காக ரூ.1125 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வித் தர அடிப்படையிலான நிதியின் கீழ் ரூ.95.80 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
பள்ளி பராமரிப்புச் செலவுகளாக ரூ.880 ரூபாய் மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனைத்துப் பணிகளும் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி