அரசியல்உள்நாடு

நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

காலி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமை தாங்கினார்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, பிரதி அமைச்சர்களான நளின் ஹேவகே மற்றும் ரத்ன கமகே, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ஆயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான பணிகளை எட்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

Related posts

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் பிரதமர் ஹரிணியை சந்தித்தனர்

editor

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ்!

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு