சூடான செய்திகள் 1

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ – கலல்பிடிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் இருந்து கதுறுவலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிடிவல மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்