உள்நாடுபிராந்தியம்

நிக்கவெரட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது

குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்கள் 20, 32 மற்றும் 51 வயதான நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மேலும் 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

வரவு செலவுத்திட்டம் 2023 [நேரலை]