வகைப்படுத்தப்படாத

நிக்கவெரட்டியவில் பேருந்து விபத்து – 36 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரம்மொன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Warner நிறுவனத் தலைவர் பதவி விலகல்…

அமெரிக்காவில் கடுங்குளிர் – 8 பேர் உயிரிழப்பு

வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடை