சூடான செய்திகள் 1

நாளை(21) நள்ளிரவு முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-ரயில் சேவையின் தரவரிசை சிலவற்றின் முரண்பாடு மற்றும் சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம்(18) ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதோடு, அதன்படி 23ம் திகதி வியாழனன்று நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எட்டப்பட உள்ளதாகவும் புகையிரத எஞ்சின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை(21) நள்ளிரவு முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பானது கைவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இ.போ.ச பேருந்து கட்டணங்களும் குறைக்க இணக்கம்

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு