சூடான செய்திகள் 1

நாளை(15) முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாளை தொடக்கம் ஜனவரி 5ம் திகதி வரை அமுலில் இருக்குமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பண்டிகைக் காலத்தில் குடிபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பது வழக்கம்.

இத்தகைய சாரதிமாரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

மாத்தறை நகைக்கடை கொள்ளை – ஒருவர் கைது

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்