சூடான செய்திகள் 1

நாளை(07) பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான காலநிலை

(UTV|COLOMBO) பெரும்பாலான பகுதிகளில் நாளை(07) வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் புத்தளம் மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related posts

மல்வத்தை மஞ்சு கைது

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்