உள்நாடு

நாளை முதல் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளமையை சரிசெய்வதற்கு சுமார் 14-16 நாட்கள் தேவைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (15) வழமை போன்று 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு நாளை (16) முதல் உரிய வகையில் நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் மின்வெட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

Related posts

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம் – பிரதமர் ஹரிணி

editor

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு