உலகம்

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க சீனா முடிவு

சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து சீனா நாளை (20) முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகத்தின் படி, பெற்றோல் மற்றும் டீசல் விலை டன்னுக்கு சுமார் 32 அமெரிக்க டொலர்களாக (220 யுவான்) குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மூன்று பெரிய எண்ணெய் நிறுவனங்களான – சீன தேசிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , சீன பெட்ரோ இரசாயனக் கூட்டுத்தாபனம் மற்றும் சீன தேசிய ஆஃப்ஷோர் எண்ணெய் கூட்டுத்தாபனம் – மற்றும் பிற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்தை திறம்பட ஒழுங்கமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய விலை நிர்ணய பொறிமுறையின் கீழ், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் விலைகள் ஈடு செய்யப்படுகின்றன.

Related posts

அமெரிக்கா : 46 ஜனாதிபதியாக ஜோ பைடன்

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

இளவரசர் பிலிப்பிற்கு சனியன்று இறுதி அஞ்சலி