உள்நாடு

நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறைமை

(UTV | கொழும்பு) –    கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களுக்காக, ஸ்டிக்கர் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த ஸ்டிக்கர் முறைமையில் ஒருசில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்புக்குள் நுழையும் போதிருக்கும் நுழைவாயிலில், பாதுகாப்பு கடமைகளில் இருக்கும் பொலிஸாரிடம், முழுமையான விபரங்களை கொடுக்கவேண்டும். அதன்பின்னர், புதிய ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்த புதிய முறைமை, நாளை (07) முதல் அமுல்படுத்தப்படும்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் கைது

சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானக் காணிப் பிரச்சினையை தீர்த்து வைத்தார் தௌபீக் எம்.பி..!

முட்டை விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதாம்

editor