சூடான செய்திகள் 1

நாளை முதல் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்

(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ தபால் மூல வாக்காளர் அட்டைகள் மிகவும் பாதுகாப்புடன் விநியோகிப்பதற்காக தபால் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால் அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தபால் மூல வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பான பொதிகளில் நாளை(22) முதல் உறுதி செய்யும் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக குருநாகல் மாவட்டத்தில் 70,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு

முன்னாள் ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை