சூடான செய்திகள் 1

நாளை மறுதினம் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)  எதிர்வரும் 22ம் திகதி காலை 09 மணிமுதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மாநகர சபை பகுதி, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைத் பகுதி, கொடிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதி, றத்மலானை மற்றும் சொய்சாபுர மாடி வீட்டுத் தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

 

 

Related posts

கொழும்பு – கராச்சி விமான சேவை இன்றும் இரத்து

அடுத்த மாதம் 5ம் திகதி கொழும்பு – கோட்டை வரையிலான இலகு ரயில் பாதை ஆரம்பம்

நேவி சம்பத் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில்