உள்நாடு

நாளை பேருந்துகள் இயங்காது

(UTV | கொழும்பு) –  நாளை (28) தமது சங்கத்தின் பேருந்துகள் இயங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நிலவும் எரிபொருள் நிலைமை காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 1,347 முறைப்பாடுகள் பதிவு.

editor

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

editor

தேசபந்து தென்னகோன் நாளை சரண்டைவாரா?

editor