உள்நாடு

நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள வைத்தியர்கள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து தினசரி சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் நியாயமான தீர்வினை வழங்கினால், வேலைநிறுத்தம் குறித்து மீளப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Related posts

வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்

ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள இடமளிக்குமாறு பாராளுமன்றம் அறிவிப்பு

ஆலையடி குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – விவசாயிகளிடம் உறுதியளித்தார் தவிசாளர் மாஹிர்

editor