வகைப்படுத்தப்படாத

நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்..

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.

இதன் காரணமாகவே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்ததாக தொடரூந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.

பிரச்சினை தொடர்பில் அண்மையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

எனினும் அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையிலேயே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ජනාධිපතිවරණයට පෙර මහ බැංකු අධිපති තනතුරෙන් ඉවත් වීමට යයි

சீனாவில் பாரிய நிலநடுக்கம்

Pakistani national arrested with heroin