உள்நாடு

நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்

(UTV|கொழும்பு) – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஏப்ரல் 25, 27, 28, 29 அல்லது மே மாதம் 4 திகதி முதலான ஏதாவது ஒரு திகதியில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பன்கொட பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, இன்று நள்ளிரவின் பின்னர், தற்போதைய நாடாளுமன்றத்தின் அதிகார காலம், நான்கரை வருடத்தை கடந்து செல்வதனால், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பெரும்பாலும் நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிராந்திய நலனில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்கள் முன்னின்று செயற்படும்! – டாக்டர் சனூஸ் காரியப்பர்

editor

அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் இரு வார பயிற்சி

editor

அமெரிக்கா வீசா இல்லை- தவித்த சரத் வீரசேகரவும், பிரசன்னவும்