வகைப்படுத்தப்படாத

நாளை கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – நாளை காலை 10.00 மணி முதல் 18 மணிநேரம் கொழும்பு – 1, கொழும்பு – 2 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அக் காலப்பகுதியில் கொழும்பு 8 மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்