உள்நாடு

நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020ம் புதிய ஆண்டில் இன்று(02) முதல் தடவையாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இவ்வாறு கூடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

இதன்போது அவைத்தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் முதல் மின்சார schooty அறிமுகம்

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து