நாளொன்றில் சுமார் ஆயிரம் கடிதங்கள் தன்னை வந்து சேர்வதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் 900 கடிதங்கள் தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொலன்னாவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடிதங்களின் ஊடாக முன்வைக்கப்படும் பிரச்சினைகள் கிராமங்களுடன் தொடர்புபட்டவை.
அவற்றை சாதாரணமாக தீர்க்க முடியும். எனினும் அவை எம்மிடம் வருகின்றன.
உள்ளுராட்சி மன்றங்கள், நகர சபைகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் இந்த பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும்.
இவற்றை தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதனால் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி மிகவும் முக்கியமான நாளாகும். செய்ய வேண்டியது என்ன என மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள்.
மாற்றங்களை மேற்கொண்டு நாம் இந்த பயணத்தை முன்னோக்கி செல்ல வேண்டுமென வதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.