சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 16ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று சி.ஐ.டி முன்னிலையில்

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : 200 பேருக்கு இலவச ஹஜ் யாத்திரை வாய்ப்பு

செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்