உள்நாடு

நாரங்கல மலையைப் பார்வையிடச் சென்றபோது ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிய 22 பேர் பாதுகாப்பாக மீட்பு

நாரங்கல மலையைப் பார்வையிடச் சென்றபோது ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிய ஒரு யுவதி உள்ளிட்ட 22 பேர், இராணுவத்தினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, நுகேகொடை, மஹரகம, கொஸ்கொட, பன்னிபிட்டிய ஆகிய இடங்களில் வசிக்கும் குறித்த 22 இளைஞர் யுவதிகளும் 3 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று முன்தினம் (04) பிற்பகல் நாரங்கலவுக்குச் சென்று இரவு அங்கேயே முகாமிட திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற்பகலில் பெய்த கனமழை, பலத்த காற்று மற்றும் கடும் குளிர் காரணமாக அவர்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

இது குறித்து பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பதுளை, எலதலுவவில் உள்ள 112 படைப்பிரிவு தலைமையக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறித்த பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட 15 பேர் கொண்ட 2 இராணுவக் குழுவினர், நேற்றுமுன்தினம் (04) இரவு 9.00 மணியளவில் மீட்புப் பணியை ஆரம்பித்துள்ளனர்.

பாதகமான வானிலை இருந்தபோதிலும், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மலையின் அடிவாரத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் முகாம் அமைப்பதற்காக அதே குழுவினரால் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் கூடாரங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மலை உச்சியில் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட நொடியில் பெற்றுக் கொள்ள

மாமனார் பொல்லால் தாக்கியதில் 24 வயதுடைய மருமகன் உயிரிழப்பு!

editor

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்