உள்நாடு

“நாம் தோல்வியடையவில்லை” : இராணுவத் தளபதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படாமல் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று(13) காலை நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

´நாம் தோல்வியடையவில்லை. எவரும் தோல்வியடையவில்லை. எப்படி தோல்வி என கூறுவது? மக்கள் தொகை அதிகமுள்ள அதேபோல் அதிக நீரோட்டம் நிறைந்த பகுதியாக கருதப்படும் கொழும்பில் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டுக்கும் மீன் விற்பனை செய்யும் மத்திய நிலையத்தில் ஏற்பட்ட தொற்றே இன்றைய நிலைக்கு காரணம். தற்போது மினுவாங்கொட கொவிட் தொத்தணி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கொத்தணி மூலமே நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாம் தோல்வியடையவில்லை. தோல்வியடைய போவதும் இல்லை. நாட்டில் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம்´ என்றார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

சவூதி தூதவரை சந்தித்த திலித் ஜயவீர எம்.பி

editor

அதிவேக நெடுஞ்சாலை கார் விவகாரம் : சாரதிக்கு விளக்கமறியல்