தமக்கு எதிரான வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ நேற்று (19) ஹம்பாநதோட்டை மாவட்ட நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்.
ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக முடியாமல் உள்ளதாகவும் வெளிநாடு செல்ல அனுமதிக்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தை கோரினார்.
இதை ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ,
“நீதித்துறை அமைப்பின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இந்த நாட்டு மக்கள் நாளுக்கு நாள் பொலிஸ் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.”
