ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை சுமார் இருபது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழு சந்தித்து விசேட கலந்துரையாடல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலின் போது, அரசியல் ஒத்துழைப்பின் அவசியம், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, ரோஹித அபேகுணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ரமேஷ் பத்திரன, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக வக்கும்புர, அஜித் ராஜபக்ச, மதுர விதானகே, பிரேமநாத் சி. டோலவத்தே, இந்திக அனுருத்த மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மதுர விதானகேவின் இல்லத்தில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.