அரசியல்உள்நாடு

நாமலை பாராட்டிய மஹிந்த – மாகாண சபைத் தேர்தல் நடக்காது என்கிறார்

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியாலான அரசியலில் ஈடுபடுங்கள். மக்களுடனான நெருங்கிய தொடர்பு தான் அரசியல் இருப்பினை பலப்படுத்தும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பலமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

சமகால அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைவரம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் எழுச்சிப் பெற்றுள்ளமை பெற்றுள்ளமை தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கட்சியின் எழுச்சிக்காக தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.

மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியாலான அரசியலில் ஈடுபடுங்கள். மக்களுடனான நெருங்கிய தொடர்பு தான் அரசியல் இருப்பினை பலப்படுத்தும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பலமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை இந்த அரசாங்கம் வெகுவிரைவில் நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு அரசாங்கம் தற்போது வராது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு முழுமையாக பலவீனமடைந்துள்ளது.

கடந்த 7 மாத காலத்துக்குள் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் பலமான எதிரணியாக செயற்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்