அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நான் ஜனாதிபதியாக வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவேன் – நாமல் எம்.பி

அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை உகண பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பின் போது, மக்கள் தங்கள் வாழ்க்கைநிலைச் சிக்கல்கள், சமூக தேவைகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நேரடியாக முன்வைத்ததுடன், எதிர் காலத்தில் நீங்கள் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எதிர் காலத்தில் நான் ஜனாதிபதியாக வந்தால் இப் பிரச்சினை அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஊடக அபிவிருத்தியும் இளைஞர்களின் முன்னேற்றமும் நாட்டின் எதிர்காலத்திற்குத் துணைபுரியும்.

எனவே மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டி.வீரசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

நாமல் எம்.பியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

editor

கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு