உள்நாடு

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் கோரியே தாம் கடிதம் அனுப்பியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து புத்திக மனதுங்க விலகியுள்ளதாகவும், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

JUST NOW: அமெரிக்காவின் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த கப்பல் விபத்து!

சுவிஸ தூதரக அதிகாரி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு