சூடான செய்திகள் 1

நான்கு மணித்தியாலங்கள் மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு…

(UTV|COLOMBO) இலங்கை மின்சார சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொடவிடம் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மின்சார சபைக்காக தனியார் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் மற்றும் எரிபொருள் கொள்வனவு செய்த போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்தே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த முறைப்பாட்டை அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார்.

 

 

 

 

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

காற்றின் வேகம் அதிகரித்து வீசலாம்

தீர்மானம் இன்றி முடிவடைந்த சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்…