அரசியல்உள்நாடு

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (22) நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை அடுத்து இந்த பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்ணான்டோவும், டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக அருண ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஜனாதிபதியுடன் அமெரிக்க விஜயத்தில் பங்கேற்றுள்ள வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதவி வகிக்கும் வௌிவிவகாரம், வௌிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு ஔடத உற்பத்தி நிலையத்தை அமைக்க அனுமதி

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

மற்றுமொரு காதி நீதிபதி அதிரடியாக கைது!