உள்நாடு

நான்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு

(UTV|பொலன்னறுவை )- பொலன்னறுவை – அரலகங்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல வெடி பொருட்களை பொலன்னறுவை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியின் 15 எப்.சி கால்வாயில் உர பைக்குள் சுற்றி போடப்பட்டிருந்த 135 டி56 ரக துப்பாக்கி ரவைகள், 4 மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் 3 ஸ்பிரிட் வகை திரவம் அடங்கிய போத்தல்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பற்ற பொருட்களை இன்று மன்னம்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்து நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரலகங்வில பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

இன்று எரிபொருள் விலை திருத்தம் ?

editor