கட்டானை – தெமன்ஹந்தி பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்கள் இருவர் நான்கு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கட்டியல பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 58 வயதுடைய இரு நபர்களாவர்.
ஒரு சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும், T-56 தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், ரிவோல்வர் துப்பாக்கிகளை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய மாதிரி ஒன்றும் மற்றும் துப்பாக்கி தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மற்றொரு சந்தேக நபரிடமிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பணியகம் மற்றும் கட்டானை பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகின்றன.